முகத்தில் மசாஜ் செய்யும் நத்தை: பிரபலமடையும் புதிய ஃபேஷியல்

Snail-massaging-the-face-of-women--the-new-facial-that-is-becoming-popular

ஜோர்டான் நாட்டிலுள்ள பியூட்டி பார்லரில் பெண்கள் முகத்திற்கு ’நத்தை மசாஜ் ஃபேஷியல்’ செய்வது பிரபலமடைந்து வருகிறது.


Advertisement

image

முகத்திலுள்ள இறந்த செல்களை புதுப்பிப்பதற்காக பெண்கள் மாதம்தோறும் ஃபேஷியல் செய்துகொள்வார்கள். ஃபுருட் ஃபேஷியல், ஆர்கானிக், ஒய்ட்னிங், கோல்டுடன், முத்து ஃபேஷியல் என்று பல வித ஃபேஷியல்கள் செய்யப்படுகின்றன. அப்படி இறந்த செல்களை புதுப்பிக்கும்போது முகத்திலுள்ள அழுக்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.


Advertisement

image

இந்நிலையில், ஜோர்டான் நாட்டில் புதுவிதமாக பெண்களுக்கு உயிருள்ள நத்தைகளை முகத்தில் விட்டு ஃபேஷியல் செய்யப்படுவது பிரபலமாகி வருகிறது. உயிருள்ள நான்கைந்து நத்தைகளை முகத்தில் விட்டு மேய விடுகிறார்கள். அது முகத்தில் மேய்ந்து அழுக்குகளை எல்லாம் சுத்தம் செய்கிறது.

image


Advertisement

இதனால், பெண்கள் மிகவும் இளமையாகவும் பொலிவாகவும் காணப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த நத்தைப் மசாஜ் பல பெண்களையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement