சிரியாவின் டியிர் இசோர் மாகாணத்தில் அமைந்துள்ள அல்பு கமல் பகுதியில் நேற்று இஸ்ரேல் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனை போர் குறித்து கண்காணித்து வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஈரானை சேர்ந்த எட்டு பேரும், சிரியாவை சேர்ந்த இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதோடு அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் இஸ்ரேலிய விமானப்படை ஆகாயத்திலிருந்து குண்டு போட்டு தகர்த்துள்ளது.
முன்னதாக கடந்த 3 ஆம் தேதியன்று சிரியாவின் கிழக்கு பகுதியில் இருந்த 16 கிளர்ச்சியாளர்களை இஸ்ரேல் விமானப்படை கொன்றது.
சிரியாவில் கடந்த 2011 முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சுமார் 380000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அடைக்கலம் தேடி மாற்று இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
Loading More post
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!