மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படத்துக்கு அவருடைய கணவரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பல வருடங்களாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இந்தத் தம்பதியினர் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
இதனையடுத்து ''இப்போது நாங்கள் மூன்று பேர்” என்று விராட் கோலி அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ளப் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் உலகிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இப்போது விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு ஆர்சிபி அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அனுஷ்கா சர்மா இன்ஸ்டாவில் "ஒரு உயிர் உருவாவதை அனுபவித்து வருகிறேன்" என புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள விராட் கோலி "என் ஒட்டுமொத்த உலகமும் ஒரு புகைப்படத்தில்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?