போலீஸ் காவலில் இருந்து கடத்தப்பட்ட 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் லூவ் குஷ் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்யப்பட்டது. சிறுமிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த உத்தரப்பிரதேச மாநில போலீசார் சிறுமியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் லூவ் குஷ்-யும் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையிலிருந்து தப்பிய லூவ் குஷ், காவல் நிலையத்திற்கு சென்று சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை கவனித்துவந்த பெண் காவலரை அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடத்தப்பட்ட சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பல ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது.


Advertisement

போலீசார் தேடிவந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, சிறுமியை குருக்ராமில் இருந்து உத்தரப்பிரதேச காவல்துறையின் ஸ்வாட் குழு மீட்டது. இதுதொடர்பாக 12 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மாவட்ட எஸ்.பி. ராகுல் குமார் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement