குடிபோதையில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேலூர் அருகே பிரசவத்துக்கு மனைவி தாய்வீடு சென்ற நிலையில், குடிபோதையில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

image

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருக்கானை கிராமத்தைச் சேர்ந்த 80வயது மூதாட்டி செல்லாயி, இவருக்கு கணவன் மற்றும் குழந்தைகள் இல்லாததால் ஆதரவற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு அதே ஊரை சேர்ந்த கார்த்திக் பாண்டியன் (37) என்பவர், குடிபோதையில் மூதாட்டி செல்லாயியை குடிசைக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


Advertisement

மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் கார்த்திக் பாண்டி அங்கிருந்து தப்பிச் ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில், மூதாட்டி செல்லாயி அளித்த புகாரில் அடிப்படையில், ஒத்தக்கடை காவல்துறை ஆய்வாளர் ஆனந்ததாண்டவம், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார்த்திக் பாண்டியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்,

image

மேலும் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கார்த்திக் பாண்டிக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆன நிலையில், அவரின் மனைவி பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிட்டத் தக்கது .


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement