சாலைகள் இல்லாததால் வரமுடியாத ஆம்புலன்ஸ்.. கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிறந்து இறந்த குழந்தை!.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி, ஜினெத் கிராமத்தில் சாலைகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல், கர்ப்பிணிப் பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை  பிறந்து உயிரிழந்தது. அந்த பெண் இப்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.


Advertisement

image

உத்தரகாண்டில் உள்ள மோசமான சாலை உள்கட்டமைப்பினால் பச்சிளம் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் மரணமடைந்த மற்றொரு சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தின் ஜினெத் கிராமத்தில் சாலைவசதி இல்லாததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாமல் பிறந்த குழந்தை இறந்துள்ளது.


Advertisement

சனிக்கிழமை இரவு அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது, அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது, ஆனால் சாலை வசதி இல்லாத காரணத்தால் அந்த வாகனம் கிராமத்தை அடைய முடியவில்லை. அதன் பின்னர் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் ஆனது, பிரசவத்திற்குப் பிறகு  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் அந்த பெண்ணை கட்டிலில் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு கொண்டுசென்றனர்.

image

  “எங்கள் கிராமத்தில் நீண்ட காலமாக சாலைவசதியை கோருகிறோம், வேலை தொடங்கியிருந்தாலும் மிகவும் மெதுவாக வேலை நடக்கிறது. சம்பவம் நடந்த அன்று ஆம்புலன்ஸ் எங்கள் வீட்டிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் காத்திருந்தது., ஆனாலும் அங்கு வரமுடியவில்லை. பின்னர் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்தது, ஆண் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது.  அதன்பிறகு அவரது தாயார் புஷ்பா தேவியின் நிலையும் மோசமடைந்தது. அவள் இப்போது இரத்த சோகையால் அவதிப்படுகிறாள்” என்று அந்தப் பெண்ணின் மைத்துனர் ரமேஷ் அவஸ்தி கூறினார்.


Advertisement

“முதலில் என் மனைவியை உத்தரகாஷி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர், அங்கிருந்து டெஹ்ராடூனில் உள்ள கொரோனேசன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பிறகு அங்கு படுக்கைகள் இல்லாததால் புஷ்பா மீண்டும் ஸ்ரீ மஹந்த் இந்திரேஷ் மருத்துவமனைக்கு (எஸ்.எம்.ஐ.எச்) பரிந்துரைக்கப்பட்டார். அங்கும் ஐ.சி.யூ படுக்கைகள் இல்லாததால் அவர் மீண்டும் எஸ்.எம்.ஐ.எச். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மீண்டும் அவர் வெல்ம்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று அந்த பெண்ணின் கணவர் கூறினார்

loading...

Advertisement

Advertisement

Advertisement