இந்திய தொலைத்தொடர்பு சந்தையின் முன்னணி நிறுவனங்களாக இருந்த வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனம் கடந்த 2018இல் ஒரே நிறுவனமாக இணைந்தது.
அது முதலே வோடஃபோன் ஐடியா லிமிடெட் என சொல்லப்பட்டு வந்த சூழலில் புதிய பிராண்டாக அந்த நிறுவனம் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தற்போது ‘வீ’ (VI) என்ற பெயரில் புது பிராண்டாக லான்ச் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தாக்கர்.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு துல்லியமாக டிஜிட்டல் சேவை இணைப்பு வசதியை கொடுப்பதில் ‘வீ’ கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்பு பொது வெளியில் தெரியவந்தவுடன் தங்கள் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா நெகட்டிவ்
பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்: அதிரடியாக பணியை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
சசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்