[X] Close

மனைவியின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்த கணவர் - வாக்குவாதம் முற்றியதால் நடந்த விபரீதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அரசு பள்ளி ஆசிரியர் அவரை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

image
புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (58). அரசு பள்ளி ஆசிரியரான இவரது மனைவி சாந்தி (52) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இந்த ஆசிரியர் தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் விஜயன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார், அதேபோல் இன்றும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த விஜயன், சாந்தியின் கை கால்களை கட்டி வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

கொலை செய்த பின் விஜயன் தான் கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் சரணடைந்த விஜயன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற முதலியார்பேட்டை போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image
இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement