‘மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி ஆட வேண்டும்’- ரெய்னா 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கடந்த வாரம் தனிப்பட்ட காரணங்களுக்காக துபாயில் முகாமிட்டுள்ள சென்னை அணியிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். 


Advertisement

image

ஐ.பி.எல் தொடர் ஆரம்பமானது முதல் கடந்த சீசன் வரை சென்னை அணிக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி பேட்டிங்கில் அசத்தியவர் ரெய்னா. 


Advertisement

அவரது இடத்தில் யார் ஆடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும், விவாதங்களும் ரசிகர்களிடையே நடந்து வரும் சூழலில் அதற்கான பதிலை அவரே சொல்லியுள்ளார். 

‘அந்த பொசிஷனில் விளையாடும் வீரர் அணியில் அசாத்திய திறன் படைத்த பேட்ஸ்மேன்களால் மட்டுமே முடியும். அது பேட்டிங் இன்னிங்சின் அஸ்திவாரம் என்றும் சொல்லலாம். அதனால் மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி தான் ஆட வேண்டும். 

image


Advertisement

 மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமும் தோனிக்கு உள்ளது. 2005இல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக தோனி அந்த இடத்தில் இறங்கி அபாரமாக விளையாடியதை மறக்க முடியுமா’ என தெரிவித்துள்ளார் ரெய்னா. 

மூன்றாவது பேட்ஸ்மேனாக 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 993 ரன்களை எடுத்துள்ளார். 

தோனி தான் அந்த இடத்தில் ஆட சரியான வீரர் என தெரிவித்துள்ளார் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கம்பீர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement