தேர்தலில் ரஜினி களம் கண்டால் சிறப்பாக இருக்கும்- தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினி தேசியவாதி, ஆன்மிகவாதி. அவர் தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.


Advertisement

image

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருவப் படத்திற்கு, கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன், துணை தலைவர்கள் வானதி சீனிவாசன், பொதுச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது “பிரணாப் முகர்ஜி அவர்களின் அரசியல் சிந்தனை, பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சிறப்பாக இருந்தது. இளைஞர்கள் பாஜகவை நோக்கி வருகின்றனர். மத்திய அரசால் தமிழகம் அதிகமான பொருளாதார பயனை அடைந்து வருகிறது. அடுத்து அமையும் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்.


Advertisement

image

வருகின்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும், தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக நிர்வாகிகள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் அனைத்து கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு திந்திருக்க வேண்டும். ரஜினி தேசியவாதி, ஆன்மிகவாதி. அவர் வருகின்ற தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும்.”என்றார்

loading...

Advertisement

Advertisement

Advertisement