[X] Close >

அங்கீகரிக்கப்படாத பாரம்பரிய மருந்தை மக்கள்மீது திணிக்கிறதா சீன அரசு? எழும்பும் புகார்கள்

Government-forces-unproven-medicine-on-people-in-lockdown---Xinjiang

சீனாவில் கொரோனா வைரஸின் உச்சட்டத்தில் இருந்தபோது போலீஸார் நடுத்தர வயதான உய்குர் பெண்ணை கைதுசெய்தனர். அவரை பல பெண்களுடன் ஒரு செல்லில் அடைத்தனர் அங்கு அவரை ஒரு மருந்தைக் குடிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். அது அந்தப் பெண்ணை பலவீனப்படுத்தியதுடன், குமட்டல் உணர்வையும் கொடுத்ததை காவலர்கள் பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றனர். பெயர் குறிப்பிட மறுத்த அந்த பெண் ஜின்ஜியாங்கிலிருந்து இந்தத் தகவலைக் கொடுத்துள்ளார். 


Advertisement

சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ளது ஜின்ஜியாங் மாகாணம். இந்த மாகாண அரசாங்கம் வைரஸை எதிர்க்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்கிறது. இங்கு அங்கீகரிக்கப்படாத பாரம்பரிய சீன மருந்துகளை உட்கொள்ள மக்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அரசாங்க அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தடை செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

image


Advertisement

ஆரம்பத்தில் சீனாவில் அதிக பாதிப்பு இருந்தாலும், ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஜின்ஜியாங்கில் 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தீவிரமான வேலைநிறுத்தம் செய்ததால் புதிய பாதிப்புகள் இல்லை. சீனாவின் ஹூபே மாகாணம், வுஹாணில் 68,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஜின்ஜியாங்கைப் போல் மக்களை பாரம்பரிய மருந்தை உட்கொள்ள கட்டாயப்படுத்தவில்லை.

சீனாவில் பிற இடங்களில் அதிக தாக்கம் இருந்தபோதிலும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ள நிலையிலும், ஜின்ஜியாங் அரசு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல் டிஜிட்டல் போலீஸ் அரசாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஜின்ஜியாங் அதிகாரிகள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட உய்குர்கள், கசாக் மற்றும் பிற இன சிறுபான்மையினரை பாதுகாப்பு ஒடுக்குமுறையின் கீழ், சட்டவிரோத தடுப்பு முகாம்கள் உட்பட பல்வேறு வகையான தடுப்புக்காவல்களுக்குள் தள்ளியுள்ளனர். இது அவர்கள் பாதுகாப்புக்கு என தெரிவிக்கும் அதிகாரிகள், மற்ற இடங்களைவிட ஏன் கடுமையான நடவடிக்கைகளை இங்கு எடுத்துள்ளனர் என்பதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சீன அரசாங்கம் பல ஆண்டுகளாக இவர்களின் பூர்வீக ஆட்சியை எதிர்த்து ஜின்ஜியாங்கை கட்டுப்படுத்த போராடி வருகிறது. ஆனால் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இங்கு போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மாதம், சமூக ஊடகங்களில், வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜின்ஜியாங்கில் மிகவும் கடினமாக உள்ளதாக பலர் புகார் அளித்துள்ளனர். பலரி வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சிலருடைய வீடுகளுக்கு விலங்கிட்டுள்ளனர். சில வீடுகளின் முன் கதவுகளை உலோக கம்பிகளால் மூடியுள்ளனர்.


Advertisement

image

ஒரு ஹான் சீனப்பெண், பாதுகாப்பு உபகரணங்களுடன், ஒரு மருத்துவ பணியாளருக்கு சீன பாரம்பரிய மருந்தை குடிக்கக் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அதில் நாங்கள் நோயால் பாதிக்கப்படாதபோது ஏன் எங்களை மருந்துகளைக் குடிக்க கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று ஆகஸ்ட் 18ஆம் தேதி போஸ்ட் செய்தார். ஆனால் அந்த பதிவு உடனே நீக்கப்பட்டது.

இதுபோன்ற கடும்விமர்சனங்களுக்குப் பிறகு அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர். இப்போது சில குடியிருப்பாளர்கள் தங்கள் காம்பவுண்டுக்குள் நடக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருசிலரே அதிகாரத்துவ ஒப்புதல் செயல்முறைக்குப் பிறகு இப்பகுதியைவிட்டு வெளியேவர அனுமதி பெற்றுள்ளனர்.

கொரோனா சோதனையை ஐந்துமுறை எடுத்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் என வந்தாலும் அவர்களை நடைப்பயணத்திற்குக்கூட ஏன் வெளியே விடவில்லை என்று கூறவில்லை. மேலும் பாரம்பரிய சீன கலாசாரத்தின் மறுமலர்ச்சியை ஆதரிக்கும் சீன சர்வாதிகார தலைவரான அதிபர் ஜி ஜின்பின் இந்த தீர்வை ஆதரிக்கிறார் என்று கூறுகின்றனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close