கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத காதல் கணவர்: மனைவியின் விபரீத முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் கல்லூரி கட்டணம் செலுத்த கணவன் பணம் தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். (48). இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் தேவிகா(20). கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார். கடந்த 10 மாதத்திற்கு முன்பு தேவிகா வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேவிகா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. காலை எழுந்துபார்த்தபோது தேவிகா தூக்கில் தொங்குவதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து அரியாங்குப்பம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.


Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேவிகா தனது படிப்பிற்கு கல்லூரி கட்டணம் செலுத்த தனது கணவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கணவர் பாலமுருகனால் பணம் கொடுக்கமுடியவில்லை. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேவிகா தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement