கொரோனா வந்தது ’கடவுளின் செயல்’ என்று கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.
சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 41-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது, ”கொரோனாவால் இந்திய பொருளாதாரம் அசாதாரணமான சூழலில் உள்ளது. கொரோனா தொற்றுக்காரணமாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வசூல் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது, கடவுளின் செயல்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், “இந்தியாவின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் முதல்முறையாக மந்த நிலையை சந்தித்துவருகிறது. சத்தியத்திற்கான அர்ப்பணிப்பை கடைபிடிக்காதவர்கள்தான் கடவுளைக் குறைகூறுகிறார்கள். பா.ஜ.க அரசு முறைசாரா துறையை தாக்கியுள்ளது.
2008 ஆண்டு உலகம் கடுமையான பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்டது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளே சிக்கலில் இருந்தன. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் மட்டும் பாதிக்கவில்லை. அந்த சமயத்தில், ’ஏன் இந்தியா பாதிக்கவில்லை?’ என்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் கேட்டேன். ’இந்தியா இரண்டு பொருளாதார கட்டமைப்புகளை கொண்டுள்ளது. பெரிய நிறுவனங்களைக்கொண்டது முறையானது. விவசாயிகள் எல்லாம் உள்ளது முறைசாரா கட்டமைப்பு. முறைசாரா கட்டமைப்பு பாதிக்கப்படாதவரை நாட்டில் பொருளாதார சரிவு ஏற்படாது’ என்றார்.
जो आर्थिक त्रासदी देश झेल रहा है उस दुर्भाग्यपूर्ण सच्चाई की आज पुष्टि हो जाएगी: भारतीय अर्थव्यवस्था 40 वर्षों में पहली बार भारी मंदी में है।
‘असत्याग्रही’ इसका दोष ईश्वर को दे रहे हैं।
सच जानने के लिए मेरा वीडियो देखें। pic.twitter.com/sDNV6Fwqut — Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2020
செல்லாக்காசு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., பொதுமுடக்கம் இவையனைத்தும் நாட்டை பாதித்துவிட்டது. இதனால், முறைசாரா துறை வீழ்ச்சியடைந்துவிட்டது” என்று பேசியுள்ளார்.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!