இளம்பெண்ணை ஏமாற்றியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மயிலாடுதுறை அருகே உதவி காவல் ஆய்வாளர் மீது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மயிலாடுதுறை அருகே காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் என்பவர் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அப்பெண் கருவுற்று பின்பு கரு கலைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் ரவிராஜ் மீது 417, 420, 294(b), 312, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழும், ரவிராஜின் தாயார் ராசாத்தி மீது 107, 120 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement