"அய்யப்பனும் கோஷியும்" தமிழ் ரீமேக்கில் கார்த்தி, பார்த்திபன்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற "அய்யப்பனும் கோஷியும்" தமிழ் ரீமேக்கில் பார்த்திபனும், கார்த்தியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Advertisement

மலையாளப் படமான 'அய்யப்பனும் கோஷியும்' திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த திரைப்படம். இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.52 கோடி வசூல் செய்தது "அய்யப்பனும் கோஷியும்".

image


Advertisement

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின. இந்தப் படத்தில் பிஜூ மேனன் கதாப்பாத்திரத்தில் சசிகுமார், சரத்குமார் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. பிருத்விராஜ் கதாப்பாத்திரத்துக்கு ஆர்யா, சிம்பு பெயர்கள் அடிப்பட்டது.

image

இந்நிலையில் இப்போது பார்த்திபனும், கார்த்தியும் முறையே பிஜூ மேனன் பிருத்விராஜ் கதாப்பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. "அய்யப்பனும் கோஷியும்" திரைப்படத்தின் இயக்குநர் சச்சி மறைவதற்கு முன்பு இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் பார்த்திபனும், கார்த்தியும் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பியதாகவும் கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement