கடிதம் எழுதிய தலைவர்களுக்கு ஸ்கெட்ச் ? - காங்கிரஸில் தொடரும் குழப்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படக்கூடாது என கடிதம் எழுதியவர்கள் கட்சிக்குள் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Advertisement

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை நியமிக்க அண்மையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூடியது. அதற்கு முன்பாகவே இந்திய முழுவதிலிருந்தும் 23 காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைவராக நியமிக்கப்படாமல், புதிய ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

image


Advertisement

இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டியில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் கருத்து மோதல்களும், சலசலப்பும் ஏற்பட்டன. இறுதியில் புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர்வார் என பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டன. காங்கிரஸின் இந்த உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வந்ததாக எண்ணிய நிலையில், அங்கு மீண்டும் புதிய பிரச்னை எழுந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என கடிதம் எழுதியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியினர் குழுவாக இணைந்து குரல் எழுப்பினர். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிடின் பிரசாதாவிற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதனால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், எதிர்பாராதவிதமாக உத்தரப் பிரதேச காங்கிரஸினரால் ஜிடின் பிரசாதா ஓரங்கட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாஜகவுடன் தான் காங்கிரஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்ய வேண்டும் எனவும், உட்கட்சிக்குள்ளேயே செய்வது ஆற்றல் விரயம் எனவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளில் சலுகை பெற ஃபாஸ்டேக் கட்டாயம் : நெடுஞ்சாலைத்துறை

loading...

Advertisement

Advertisement

Advertisement