[X] Close

'மாஸ்டர்' படத்தை பார்த்து சிலாகித்துப்போன நடிகர் விஜய் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாஸ்டர் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜை வியந்து பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடுத்தப் படத்திற்கான கதையையும் தயார் செய்ய சொல்லியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப் போனது. அதனால், மாஸ்டர் படத்தில் மேலும் சில திருத்தங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்திருக்கிறார்.

image


Advertisement

மாஸ்டர் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினருக்கு திரையிடப்பட்டிருக்கிறது. அப்போது காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்த விஜய், இயக்குநரிடம் 'உண்மையில் இது நான்தானா ?' எனவும் வியப்போடு வினவியிருக்கிறார். விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகளும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தாராம்.

image

மாஸ்டர் படம் கொடுத்த திருப்தியால், மீண்டும் தனக்காக ஒரு கதையை தயார் செய்யும்படி லோகேஷ் கனகராஜிடம் விஜய் தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2021-ல் தொடங்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விஜய்யின் 66-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் எனத் தெரிகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement