இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்ப பதிவிறக்கம் நாளையுடன் நிறைவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி தேதி (ஆகஸ்ட் 28) நாளையுடன் நிறைவடைகிறது.


Advertisement

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதைத்தவிர, தமிழகம் முழுவதும் 9 தனியார் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 60 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 600க்கும் அதிகமான இடங்களும் உள்ளன. தனியார் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

image


Advertisement

இளநிலை மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 3-ம் தேதியன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான அவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 28) நிறைவடைகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை சுயசான்றொப்பத்துடன் இணைத்து அஞ்சல் அல்லது கூரியர் சேவை மூலமாக ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 106


Advertisement

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி தேதி: ஆகஸ்ட் 31, மாலை 5.30 மணிக்குள்

இணையதள முகவரி: www.tnhealth.tn.gov.in

 

loading...

Advertisement

Advertisement

Advertisement