திண்டுக்கல்: வாகன சோதனையில் ஈடுபட்ட காவலருக்கு அரிவாள் வெட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு. ஒருவர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்.


Advertisement

image

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலையம் முன்பு இன்று மதியம் தலைமை காவலர் திருப்பதி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய தலைமை காவலர் திருப்பதி சோதனை செய்துள்ளார்.


Advertisement

அப்போது இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் தலைமை காவலர் திருப்பதியை தலையில் தாக்கிவிட்டு இருவரும் தப்பி ஓட்டினர். இதில் ஒருவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில். அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தப்பியோடிய மற்றொருவவரை போலீசார் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த தலைமை தலைமை காவலர் திருப்பதி திண்டுக்கல் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோர் தலைமை காவலர் திருப்பதிக்கு ஆறுதல் கூறினார்கள். வழக்குப்பதிவு செய்த கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement