விருதுநகரில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 10அடி நீள மலைப்பாம்பு...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள குளத்தில் மீனுக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் 7 வது முறையாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது. சிக்கியிருந்த பாம்பு மிகவும் சீற்றத்துடன் இருந்ததால், வனத்துறையினர் வந்து பத்திரமாக பிடித்தனர். இந்த குளத்தில் தொடர்ச்சியாக மலைப்பாம்புகள் பிடிபடுவதால் குளத்தை தூர் வார வேண்டும் தாங்கள் வைக்கும் கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.


Advertisement

image

ராஜபாளையம் அருகே முகவூரில் இருந்து சொக்கநாதன் புத்தூர் செல்லும் வழியில்தான் இந்த தொண்டைமான் குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் வலை விரித்து வைத்திருந்தனர். இன்று காலை வலையின் ஒரு பகுதி அறுந்து இருப்பது தெரிந்து பார்த்த போது, வலையின் மறு புறம் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது. பாம்பின் மேல் பகுதி முழுவதும் வலையில் சிக்கி இருந்ததால், தப்பிக்க முடியாமல் பாம்பு வலையுடன் பின்னியிருந்தது தெரிய வந்தது.


Advertisement

அப்பகுதி மக்கள் பாம்புடன் சிக்கியிருந்த வலையை அறுக்க முயன்றனர். அப்போது பாம்பு மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. பலர் முயன்றும் பாம்பை பிடிக்க முடியவில்லை. பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாம்பு பிடிக்கும் பிரத்யோக கருவிகளின் உதவியுடன் அவர்கள் பாம்பை பிடித்து சென்று பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.


image

ஏற்கெனவே இந்த குளத்தில் 6 முறை மலைப்பாம்புகள் பிடிபட்ட நிலையில், தொடர்ச்சியாக இன்று 7 வது முறையாக மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. இந்த குளத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வளர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மலைப்பாம்புகள் பிடிபடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

மேலும் இந்த குளத்தில் அதிகமான எண்ணிக்கையில் மலைப்பாம்புகள் இருக்க வாய்ப்பு உள்ளதால், இந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் தங்களின் கோரிக்கைகளை நிராகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement