காணாமல்போன மகளை கண்டுபிடித்துத்தர ஆட்கொணர்வு மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக நலத்துறையின் இல்லத்தில் இருந்து காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மதுரையைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில், திருச்சி காவல்துறையினர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement


மதுரை மாவட்டம் உத்தப்ப நாயக்கனூரை சேர்ந்த பாலு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்," எனக்கு ஒரு ஆண் குழந்தையும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். எனது மகள் டார்த்தி பிறந்த போது எனது குடும்பம் கடுமையான வறுமையில் இருந்தது.

image
இதனால் கடந்த 1996ம் ஆண்டு ஒரு செவிலியரின் ஆலோசனையின் பேரில் எனது மகள் டார்த்தியை, திருச்சியில் கிதியன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த மோசேஸ் மினிஸ்ட்ரி என்ற இல்லத்தில் சேர்த்து விட்டோம். பின்பு 2017ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை அடுத்து, திருச்சி சமூக நலத்துறை அலுவலர் பராமரிப்பில் நடத்தப்படும் இல்லத்திற்கு, அங்கிருந்த மாணவிகள் மாற்றப்பட்டனர்.


Advertisement


இதற்கிடையில் கடந்த 11.08.2020 அன்று திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சார்பில், திருச்சி கே.கே.நகர் காவல் ஆய்வாளரிடம் ஒரு புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் எனது மகளை ஆகஸ்ட் 11ம் தேதி முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எனது மகளை அடையாளம் தெரியாத ஒரு நபருடன் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிலர் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.


எனது மகளின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளது. எனவே எனது மகளை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாண சுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு இது குறித்து திருச்சி காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement