'பணம் கொடுக்கவில்லை': 34 பயணிகளோடு சேர்த்து பேருந்தை பறிமுதல் செய்த பைனான்ஸ் கம்பெனி!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

34 பயணிகளுடன் சென்ற பேருந்தை ஒரு நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. 


Advertisement

குருகிராமில் இருந்து மத்திய பிரதேசத்தின் குவாலியர் நோக்கி பேருந்து சென்றுள்ளது. ஓட்டுநரையும், உதவியாளரையும் மிரட்டி பேருந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதில் 34 பயணிகள் இருந்ததாக தகவல் வந்துள்ளது. பஸ் பின்னர் உத்திரபிரதேசத்தின் எட்டாவாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
பேருந்தை கட்டுப்படுத்துவதற்கு முன், ஓட்டுநரை கட்டாயப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

நிதி நிறுவனம் சட்டவிரோதமாக பேருந்தைக் கைப்பற்றியதாகவும், பயணிகள் மற்றும் ஓட்டுநர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உத்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஜீ நியூஸுடன் பேசிய ஆக்ரா எஸ்.பி. பாப்லு குமார், பேருந்தை கடத்தியவர்கள் தனியார் பைனான்ஸ் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

பேருந்தின் உரிமையாளர் நேற்று இறந்துவிட்டதாகவும், இந்த கம்பெனிதான் பேருந்துக்கு நிதி அளித்ததாகவும் கூறி பேருந்தை மடக்கிப் பிடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement