[X] Close

படகு மூழ்கியதால் தத்தளித்த பெண்கள்... ஹீரோவான 71 வயது போர்ச்சுகல் அதிபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போர்ச்சுகல் அதிபர் 71 வயதான மார்செலோ ரெபெல்லோ டிசெளசா, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விடுமுறையைக் கழிப்பதற்காக அல்கார்வே கடற்கரை நகருக்குச் சென்றிருந்தார். அப்போது படகு மூழ்கியதால் நீரில் தத்தளித்த இரண்டு பெண்களைக் காப்பாற்றிய சம்பவத்தால் நாட்டு மக்களிடம் அவர் ஹீரோவாக புகழ்பெற்றுள்ளார்.


Advertisement

image

அங்குள்ள பிரையா டூ அல்வார் கடற்கரையில் அதிபர் மார்செலா நீந்திக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோதுதான், நடுக்கடலில் பெண்கள் தவிப்பதைக் கண்டார். உடனே விரைவு படகில் சென்ற அவர், உடனடியாக இருவரையும் காப்பாற்றி கரைக்கு அழைத்துவந்தார்.


Advertisement

image

ஒரு ஹீரோவைப்போல சென்று பெண்களைக் காப்பாற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் பாராட்டுகளைக் குவித்துவருகின்றன. 71 வயதிலும் ஓர் இளைஞரைப் போல செயல்பட்ட அதிபர் மார்செலாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement