ராமர்கோயில் குறித்து டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக டெல்லி பத்திரிகையாளர் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அயோத்தி ராமர்கோயில் குறித்து டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக டெல்லி பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைதுசெய்யப்பட்டுள்ளார்.


Advertisement

image

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் தொடர்பாக அவதூறான ட்வீட்டை வெளியிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை, அவரது டெல்லி இல்லத்தில் இருந்து உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். "காவல்துறையினர் அவரை உத்தரபிரதேசத்தின் வசந்த் விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், பிறகு அவர் ஏதேனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதன் பின்னர் லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறியுள்ளனர்" என்று கனோஜியாவின் மனைவியும் பத்திரிகையாளருமான ஜகிஷா அரோரா தெரிவித்துள்ளார்.


Advertisement

ஹிந்து ஆர்மியை சேர்ந்த சுஷில் திவாரி என்பவர் ராமர் கோவிலுக்குள் சூத்திரர்கள், ஓபிசி, எஸ்சி, எஸ்.டி பிரிவினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்திருப்பது போன்ற புகைப்படத்தை மார்பிங் செய்து தனது டிவிட்டரில் பிரசாந்த் கனோஜியா வெளியிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement