இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த திங்களன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது டெல்லி ராணுவ மருத்துவமனை.
‘கோமா நிலையில் உள்ள அவர் வெண்டிலேட்டர் சப்போர்டில் பல துறைகளை சார்ந்த மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்’ என்றும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாப்படட்டு வருகின்ற சூழலில் ‘ஆண்டுதோறும் தவறாமல் அப்பா மூவர்ண கொடியை ஏற்றுவார்’ பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி.
‘என் அப்பா அவரது பால்ய காலத்திலிருந்தே என் மாமாவோடு கிராமத்தில் உள்ள எங்கள் பரம்பரை வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது வழக்கம். அப்போதிலிருந்து கடந்த ஆண்டு வரை அப்பா சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றாமல் இருந்ததில்லை. கடந்த ஆண்டு அப்பா எங்கள் வீட்டில் கொண்டாட்டிய சுதந்திர தின படங்களை பகிர்ந்துள்ளேன். அடுத்த வருடம் அப்பா நிச்சயம் மூவர்ண கொடியை ஏற்றுவார் என நம்புகிறேன். ஜெய் ஹிந்த்’ என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்