நேற்றிரவு துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியதால் விபத்துக்குள்ளானது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 50 க்கும் மேற்பட்டோர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்துக் குறித்து விசாரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரனுடன் டி.ஜி.சி.ஏ குழு ஒன்று இன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்துள்ளது. இதனால், கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!