வேலூரில் இணைய வழியில் தொலைபேசி அழைப்புகளை வழங்கும் போலி சேவை மையம் - சிக்கியது எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டவிரோதமாகவும், போலியாகவும் இணைய வழி மூலமாக தொலைபேசி அழைப்புகளை வழங்கும் போலி சேவை மையம் வேலூரில் கண்டுபிடிப்பு. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தடைய அறிவியல் நிருணர் குழு விசாரணை.


Advertisement

image

வேலூர் சார்பனாமேடு சஞ்ஜீவ் பிள்ளை தெருவில் சந்தேகத்திற்கிடமாக சில செயல்பாடுகள் நடப்பாதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசார் சார்பனாமேடு சஞ்சீவ் பிள்ளை தெருவில் உள்ள பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டில் நள்ளிரவு 2.00 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர்.


Advertisement

இதில் பாபு என்பவரது வீட்டில் இருந்து கணிணிகள், மற்றும் இணைய சேவைக்கான பொருட்களை பறிமுதல் செய்த ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் வீட்டு உரிமையாளர் பாபு என்பவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தனது வீட்டை கடந்த ஜனவரி மாதம் சென்னையைச் சேர்ந்த ஒருவர் வாடகைக்கு கேட்டார் அதன் படி வாடகைக்கு விட்டிருந்தேன். ஆனால் அவர் கடந்த 4 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை வாடகை பணத்தை மட்டும் மாதமாதம் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுவார். அவ்வப்போது போன் செய்து கணினியை சரிபார்க்க சொல்வார் என பாபு கூறியுள்ளார்.

image


Advertisement

பாபு கொடுத்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூரை சேர்ந்த முருகானந்தம் என்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் அளித்த பேட்டியில். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பனாமேட்டில் போலியாக இணைய வழி மூலமாக தொலைபேசி அழைப்புகளை வழங்கும் சேவையை எந்தவித உரிமமும் பெறாமல் சட்டவிரோதமாக PKS EXPORTS & IMPORTS என்ற பெயரில் செயல்பட்டு வந்தது தெரியவந்து. தனிப்படை மூலம் கணிணி, மோடம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு. விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த கண்ணையன் என்பவர் பெயரில் இது நடந்து வந்தது தெரியவந்தது. மேலும் இவரது தனியார் வங்கி கணக்கில் இருந்து தான் வாடகை பணம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தஞ்சாவூரை சேர்ந்த கண்ணையனின் வீட்டில் வேலை செய்யும் முருகானந்தம் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம்.

image

கண்ணையன் சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரை தேடி வருகிறோம். இது வேலூரில் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கை தடைய அறிவியல் நிபுணர் குழுவினர் விசாரிக்க உள்ளனர். அவர்களின் விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும். மேலும் இது போன்ற சட்டவிரோத இன்டர்நெட் கால் அழைப்பு மூலம் ஹவாலா பணம் தொடர்பு, தான் இருக்கும் இடத்தை மறைத்து மற்றவர்களை தொடர்பு கொள்வது போன்ற நிறைய சட்டவிரோத குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு முன் மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் இது போல நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

loading...
Related Tags : Velloreவேலூர்

Advertisement

Advertisement

Advertisement