இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரடியாகக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினாலும், பலர் ஆன்லைனில் வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது ஒரு வழியில் மக்களின் சிரமங்களைக் குறைத்தாலும், தரம் சார்ந்த பிரச்னையை மக்கள் சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது. அங்கீகரிக்கபட்ட இணையதளத்தை விட்டுவிட்டு மிகக் குறைந்த விலையில் எங்குக் கிடைக்கிறது என அதன் பக்கம் மக்கள் அலைமோதுவது தான் இந்த பிரச்னைக்குக் காரணம். இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றாலாம்.
ஒரிஜினல் போன்ற ட்யூப்ளிகேட்
நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், ‘லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பதை இணையத்தில் நம்பத்தக்க பக்கங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள். அச்சு அசல் அதே போல் இருந்தாலும் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் புதிதாக வெளியான ஒரு பொருளை அதிகத் தள்ளுபடிக்குத் தருகிறார்கள் என்றால் அதுவும் போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அப்படி அது ஒரிஜினல் மாடல் என்றால் கூட காலாவதியாகி விட்டால் அதை விற்றுத்தீர்க்கத் தள்ளுபடி அளிக்கப்படலாம். ஆனால் அரிதாகத்தான் இப்படி நடக்கும். ஆக, ‘ஆன்லைன் ஷாப்பிங்’கில் அதிக கவனத்துடன் ஈடுபட வேண்டும். ‘அதிரடி தள்ளுபடி’ என்றாலே உஷாராகிவிடுங்கள்.
கேஷ் ஆன் டெலிவரி
பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங்கின் போது கேஷ் ஆன் டெலிவரி வசதியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. பொருள்களைச் சரிபார்த்து பின் பணம் செலுத்துவது நன்று. இணையதளத்தில் பொருட்களை வாங்கியதும் அதை உறுதிப்படுத்த உங்களது மெயில் முகவரிக்கோ, மொபைலுக்கோ தகவல் அனுப்பப்படும். அந்த தகவலைப் பொருள் கைக்கு வரும்வரை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். விலை உயர்ந்த மின்சாதன பொருள்களை வாங்கும்முன் துறை சார்ந்தவர்களிடம் இந்த ஆன்லைன் தளத்தில் வாங்கலாமா என்று விசாரித்தபின் வாங்குவது நல்லது.
கவனம் தேவை
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு