[X] Close >

''டிக்கெட் தா தா கொஞ்சும் கிளியே'' - சாக்‌ஷி தோனியின் அசத்தல் பதில்!!

Shakshi-dhoni-s-funny-epic-reply-to-chennai-ipl-team

தோனியின் மனைவி ஷாக்‌ஷி இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருப்பார். இயற்கை அழகு சூழ்ந்த தன்னுடைய வீடு, செல்லப்பிராணிகள் என சாக்‌ஷியின் இன்ஸ்டா பக்கம் செம ஆக்டீவாகவே இருக்கும். எப்போதாவது அவரது கேமராவுக்குள் தோனியும் சிக்குவார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகும். இப்படி, தான் பதிவிட்ட ஒரு புகைப்படத்துக்கு பாடல் வரிகளை சென்னை ஐபிஎல் கமெண்ட் செய்ய அதற்கு பதிலாக தோனியின் மனைவி சாக்‌ஷியும் பாடல் வரியை பதிவு செய்துள்ளார்.


Advertisement

image

மஞ்சள் நிற உடையில் சாக்‌ஷி தோனி பகிர்ந்த புகைப்படத்திற்கு ''வா வா மஞ்சள் மலரே'' என சென்னை அணி நகைச்சுவையாக கமெண்ட் செய்தது. அதற்கு பதில் அளித்துள்ள சாக்‌ஷி, ''டிக்கெட் தா தா கொஞ்சும் கிளியே'' என பதிவிட்டு சென்னை அணியை வாயடைக்கச் செய்துள்ளார். சாக்‌ஷியின் கமெண்டுக்கு ரசிகர்கள் பலரும் கைதட்டி வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.


Advertisement

image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள போட்டிக்கு செல்ல சாக்‌ஷி ஆர்வமாக இருப்பதாக பலரும் பதிவிட்டுள்ளனர். 13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close