‘அக்டோபரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தப்பிக்க முடியாது’ டிராவிட்டின் கொரோனா எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வரும் செப்டம்பரில் ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள சூழலில் ‘அக்டோபர் வாக்கில் கொரோனா தொற்றுக்கு அதிகளவிலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்படலாம்’ என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்.


Advertisement

image

வெபினார் மூலமாக டிராவிட் தெரிவித்துள்ளது “கொரோனா விவகாரத்தில் இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களாகவே உள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மார்ச் மாதத்திற்கு முன்பே முடிந்தது தான் அதற்கு காரணம். ஆனால் வரும் அக்டோபரில் இது அனைத்தும் மாற வாய்ப்புகள் உள்ளன. 


Advertisement

கொரோனாவினால் கிரிக்கெட் உலகில் ஒரு சில சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு கீழ் விளையாடப்படுகின்றன. 

image

ஆனால் அக்டோபர் மாதத்தில் நோய் தாக்கம் இந்திய வீரர்களுக்கிடையே அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அப்போது இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான சீசன் ஆரம்பமாகிவிடும். ஜூனியர்ஸ், அண்டர் 16, அண்டர் 19 மற்றும் மகளீர் கிரிக்கெட் என அனைத்து போட்டிகளும் அப்போது தான் ஆரம்பமாகும். அதனால் எல்லோரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என்கிறார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement