"ஒரு மணி நேரத்தில் சதம் அடிக்கிறேன் என்றார்" பாலாஜி புகழும் இந்திய பேட்ஸ்மேன் யார் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரு மணி நேரத்தில் சதம் அடிப்பேன் என சொல்லிட்டு செய்து காட்டுவார் முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் பத்ரிநாத் என்று வேகப் பந்துவீச்சாளர் எல்.பாலாஜி பெருமையாக பேசியுள்ளார்.


Advertisement

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுடன் நேரலையில் யூடியூப் சேனலுக்கு பேசிய எல்.பாலாஜி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். முக்கியமாக பேட்ஸ்மேன் பத்ரிநாத் குறித்த சுவையான நினைவுகளை கூறினார் அதில் "யாராவது விளையாட்டாக நான் சதமடிக்க போகிறேன் என சொல்லிவிட்டு களத்தில் இறங்குவதை பார்த்திருக்கிறீர்களா. நான் அதை 2005 இல் பார்த்தேன். அவர்தான் பத்ரிநாத். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பத்ரிநாத்தை பல கோணங்களில் பார்த்திருக்கிறேன். பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக அவர் இருந்தார்" என்றார்.

image


Advertisement

மேலும் தொடர்ந்த பாலாஜி "ஒரு போட்டியில் என்னிடம் இன்னும் 1 மணி நேரத்தில் சதமடிக்கிறேன் என சொல்லிவிட்டு களமிறங்கினார். உள்ளூர் போட்டியில் மிகச் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசிக்கொண்டிருந்தனர். ஆனால் சொன்னதுபோலவே செய்தார். அதுமட்டுமல்லாமல் இந்த பவுலரின் பந்துவீச்சில் இத்தனை ரன்களை நான் குவிப்பேன் என்றும் சொன்னார் பத்ரிநாத்" என்றார் ஆச்சரியமாக.

image

நினைவுகளை மேலும் கூர்தீட்டிய பாலாஜி "பத்ரிநாத் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20 போட்டியையும் தன்னால் விளையாட முடியும் என ஐபிஎல் தொடரில் நிரூபித்தார். பேட்டிங்நுட்பத்தில் பத்ரிநாத் மிகவும் புத்திசாலி, அவரின் விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியாது. ரஞ்சிப் போட்டியில் ஆட்டத்தின் ஒரு பாதியில் சதமடிக்க முடியும் என நிரூபித்தவர்" என நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement