[X] Close

லிஃப்ட் கேட்ட சிறுமியை அழைத்துச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காரில் லிஃப்ட் கேட்ட சிறுமியை அழைத்து சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை 10 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளது திரிபுரா காவல்துறை.


Advertisement

image

திரிபுரா மாநிலம், கோவாய் மாவட்டத்திலுள்ள தெலிமுரா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜூலை 21ஆம் தேதி  ஒரு காரில் லிஃப்ட் கேட்டுள்ளார். அவருக்கு லிஃப்ட் கொடுத்த அவர்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். காரில் இருந்த 4 பேர் உள்ளிட்ட பத்து பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


Advertisement

 “இந்த வழக்கில் தொடர்புடைய பத்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டுபேர் தலைமறைவாக உள்ளனர்” என்று திரிபுராவின் வடக்கு பகுதி டிஐஜி செளமித்ரா தார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது 341,376(D) மற்றும்  4(1) ஆகியப் பிரிவுகளில் போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement