எப்போதும் பப்ஜியா?: தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


பிபிஏ படிக்கும் 20 வயது மாணவன் தனது படிப்பில் சரியாக கவனம் செலுத்ததால் தனது தந்தையால் கண்டிக்கப்பட்டுள்ளார். பின்னர் வியாழக்கிழமை காலை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement

 image
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகில் உள்ள பஸ்தி தனிஷ்மண்டன் பகுதியில் வசிப்பவர் சந்தர் சேகர் ஷர்மா. இவர், படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத தனது மகன் மானிக் ஷர்மாவை கண்டித்துள்ளார். இதனால் மானிக் ஷர்மா, தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டார்.


மானிக் ஷர்மா தனது படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது, இதனால் அவனது தந்தை சந்தர் சேகர் ஷர்மா, எப்போது பார்த்தாலும் செல்போனில் கேம் விளையாண்டுகொண்டே இருக்கிறாய் விளையாட்டை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்து என்று கூறியுள்ளார். அதனால் மானிக் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Advertisement

image
மேலும் மகனின் தற்கொலை குறித்து சந்தர் சேகர் ஷர்மா கூறுகையில் அவன் படிக்காமல் எப்போதும் செல்போனில் பப்ஜி உட்பட எல்லா விளையாட்டையும் விளையாடுவான். அதனால் படிப்பில் அவனது கவனம் குறைந்து கொண்டே வந்தது. அதனால் காலையில் கூட படிப்பில் கவனம் செலுத்தும்படி சொன்னேன். ஆனால் இப்படி நடந்துவிட்டது என்றார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement