பெண்களை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: நீதிமன்றமே அதிர்ந்த இசைக்கலைஞரின் வழக்கு!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரிஸ்டல் நகரை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோலோ 45, இவரது உணமையான பெயர் ஆண்டி அனோகியே. நான்கு பெண்களை அடைத்துவைத்து சித்திரவதை செய்து தொடர்ந்து கற்பழித்த குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் இவர்.


Advertisement

image

மார்ச் மாதம் பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் 30 வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார் அனோகியே. 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை 21 கற்பழிப்புகள், ஐந்து சிறைப்படுத்தல்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை என்று பல குற்றங்களை தொடர்ச்சியாக இவர் செய்துள்ளார்.


Advertisement

மிகக்கொடூரமான முறையில் பெண்களை அடைத்துவைத்து தொடர்ந்து வன்புணர்வு செய்யும் அனோகியோ, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளிக்கொணர்ந்த இந்த கொடுமையை தொடர்ந்து அனோகியேவின் கைபேசி, லேப்டாப் போன்றவை கைப்பற்றப்பட்டு அவர் எடுத்துவைத்திருந்த ஈவிரக்கமற்ற வீடியோக்களை ஆய்வு செய்தபோதுதான் இவரின் உண்மை முகம் வெளியானது. கொடுமைகள் அரங்கேறிக்கொண்டிருந்த இந்த காலகட்டத்தில் இவர் புகழ்பெற்ற இசைக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

இதுபற்றி பேசிய நீதிபதி வில்லியம் ஹார்ட் “ பெண்களை வன்புணர்வு செய்யும்போது அவர்கள் துடிக்கும் வேதனையை ரசிக்கும் வக்கிரமான மனம் படைத்தவராக அனோகி மாறிவிட்டார். பெண்கள் மீதான பரிதாப அவருக்கு இல்லை. இந்த கொடுமைகளையெல்லாம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் அனோகி புகழ்பெற்ற கலைஞராகவும் இருந்தார். ஆனால் அவரது வாழ்க்கை அழிந்துபோனதற்கு அவரே பொறுப்பு” என்றார்

loading...

Advertisement

Advertisement

Advertisement