’சூரியன் பிரகாசிக்கும் என்பதை எப்போதும் நம்புங்கள்’ - அபிஷேக்பச்சன் வெளியிட்ட புகைப்படம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் பச்சன், ஆராத்யா அனைவருமே கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். திங்களன்று ஐஸ்வர்யாராயும், மகள் ஆராத்யாவும் வீடு திரும்பிய நிலையில், அபிஷேக்பச்சன் சிகிச்சை பெற்று வருகிறார். 


Advertisement

image

அமிதாப், தன் கொரோனாகால தனிமை அனுபவங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் எழுதிவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். யாருடைய முகத்தையும் பார்க்காமல் ஒரு வாரம் இருப்பது கடினம் என்று தெரிவித்திருந்தார். மருத்துவனையின் தனிமையைப்போக்க இரவில் பாடிக்கொண்டிருப்பதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.


Advertisement

image

அபிஷேக்பச்சனும் மருத்துவமனை அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் சூரிய அஸ்தமனக் காட்சியின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மருத்துவனை அறையின் ஜன்னலில் இருந்து இந்தப் படத்தை  எடுத்துள்ளார்.

“சூரியன் பிரகாசிக்கும் என்பதை எப்போதும் நம்புங்கள். எப்போதும்” என்று அந்தப் படத்தை வெளியிட்டு அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement