பணியினை ஏன் முறையாக செய்யவில்லை?: 35 ஆய்வாளர்கள், எஸ்.ஐ.களுக்கு நோட்டீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வகையில் ஏற்பாடுகளையும் செய்தார். அதனடிப்படையில் மக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து காவல் கண்பாணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மக்களின் குறைகள் குறித்து தீர்வுகள் காணப்பட்டன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தங்களது பணியினை முறையாக ஏன் செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement