அவதார்- 2 பட ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று உறுதிபடுத்தியிருக்கிறார் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
கடந்த, 2009 ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தின் 1500 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவான ‘அவதார்’ படம் ‘டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையே ஓவர் டேக் செய்தது. மேலும், இந்த படத்தில் மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. மாபெரும், வெற்றியை குவித்ததால் அவதார்- 2 படத்தை இயக்க முடிவு செய்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் படம் ஐந்து பாகங்களாக தொடரும் எனவும் இரண்டாம் பாகத்தின் வெளியீடு இந்த வருடம் இருக்கும் எனவும் அறிவித்திருந்தார்.
அவரின் 32 ஆண்டுகால திரைவாழ்க்கையில் 9 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அதில், டைட்டானிக் உலகின் காதல் படங்களில் சிறந்தப் படமாக போற்றப்படுகிறது. அதுவும், ஆஸ்கர் விருதுகளை குவித்தபடம்தான்.
வரும், 2021 டிசம்பர்-17 அவதார் 2 வெளியிட திட்டமிட்டிருந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2022 டிசம்பர்-16 ந்தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். டைட்டானிக் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்துதான் அவதார் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜேம்ஸ் கேமரூனின் படத்திற்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். இப்படத்தை தயாரிக்கும் நிறுவனமான வால் டிஸ்னி மற்றப்படங்கள் தயாரிப்பதையும் ஒத்திவைத்துள்ளது
Loading More post
சாரட் வண்டியில் வலம்வந்த நடராஜன்... விழாக்கோலம் பூண்ட சின்னப்பம்பட்டி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் - மோசடி செய்து முதல் பரிசு பெற்றது அம்பலம்?
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!