ஜூலை 24ல் வெளிவரும் ரியல்மி 6ஐ : சிறப்பம்சங்கள், விலை.?

Realme-6i-to-Launch-in-India-on-July-24

இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் புதிய மாடலான 6ஐ ஜூலை 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Advertisement

சீன நிறுவனமான ரியல்மி இந்தியாவில் பல்வேறு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 24ஆம் தேதி ரியல்மி 6ஐ என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் அக்டோகோர் போர்டில் செயல்படும். ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்கும்.

image


Advertisement

இந்த போன், 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்) + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி என 4 கேமராக்கள் உள்ளன. இதுதவிர 16 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. 30 வாட் கொண்ட 4,300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.15 ஆயிரம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா எதிரொலி : புகைப்பழக்கத்தை கைவிட்ட 41% பேர்..! ஆய்வில் தகவல்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement