"கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது"-மு.க.ஸ்டாலின் !

Damaging-temples-is-not-acceptable-condemns-DMK-chief-Stalin

கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

கோவையில் நேற்று அடுத்தடுத்து 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது. கோவை என்.எச்.சாலையில் உள்ள மாகாளியம்மன் கோயில் முன்பு டயரை கொளுத்திய மர்ம நபர்கள், அங்கிருந்த சூலத்தை சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து கோவையில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர் கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோயில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் அதில் "கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement