பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் மருத்துவமனையில் அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா இருவரும் மும்பையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

image

ஜூலை 11 ஆம் தேதி புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி அபிஷேக் பச்சன், ‘’ஐஸ்வர்யா மற்றும் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா பாஸிட்டிவ் என்ற நிலையில் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடவுளின் அருளால் அம்மா ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை’’ என ட்விட்டரில் தெரிவித்தார்.


Advertisement

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவிற்கு காய்ச்சல் மற்றும் கொரோனாவிற்கான மற்ற அறிகுறிகள் காணப்பட்டதால் இருவரும் ஏற்கெனவே அமிதாப் மற்றும் அபிஷேக் அனுமதிக்கப்பட்ட நானாவதி மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமீர்கான், கரன் ஜோஹர், போனி கபூர், ஸ்ரத்தா கபூர் போன்ற பல பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் வீட்டிலும் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement