'இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகிறோம்' - பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐ.நா அவையின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொருளாதார, சமூக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அண்டோனியோ குட்ரஸ், பிரதமர் மோடி உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

image


Advertisement

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக சேர்ந்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார் அப்போது "இந்தியாவின் சுகாதார முறைகள், பிற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் வீடுகட்டி தரும் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது" என்றார்.

image

மேலும் "2020-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை இலக்காக கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகிறோம். கடந்த 6 ஆண்டுகளில் 40 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கி வைத்துள்ளோம். அதில் 22 கோடி பேர் பெண்கள். மேலும் உலகிலேயே கொரோனாவில் இருந்து விரைவாக மீளும் நாடு இந்தியா" என பிரதமர் மோடி கூறினார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement