“வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்”- வானிலை மையம் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

image


Advertisement

OTTக்கு போட்டியா? வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும் PPV! 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருக்கழுகுன்றத்தில் 9 சென்டிமீட்டரும், கேளம்பாக்கத்தில் 8 சென்டிமீட்டரும், மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement