திருப்போரூர் திமுக எம்எல்ஏ மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதர் குமார் ஆகியோர் கோயில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்தனர். இதனை திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மணின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது, இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது. இதில் லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு காரிலும், இன்னொரு குண்டு ஸ்ரீநிவாசன் என்பவரின் முதுகு பகுதியில்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்.எல் ஏ திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் கூறியுள்ளார். மேலும் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மோதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ