அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாமானிய மக்களை தாண்டி காவல்துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமிதாப் பச்சன் தன்னுடைய ட்விட்டரில், “எனக்கு கொரோனா பாசிடிவ். மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் எனது குடும்பம் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறோம். என்னுடன் கடந்த 10 நாட்களாக நெருக்கமாக இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

image

loading...

Advertisement

Advertisement

Advertisement