சல்மான் கானுக்கு ஜோடியா?: இந்திப்படம் குறித்து பேசிய மேகா ஆகாஷ்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சல்மான்கான் சிறந்த மனிதர் என நடிகை மேகா ஆகாஷ் புகழ்ந்துள்ளார்


Advertisement

தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ் தமிழில் ரஜினி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் பல படங்களில் தற்போது நடித்தும் வருகிறார். மேகா ஆகாஷ் தமிழ், தெலுங்கு தவிர்த்து இந்தியிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான சேட்டிலைட் சங்கர் என்ற திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

image


Advertisement

தற்போது பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் ராதே திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது குறித்து தெரிவித்த மேகா, பிரபுதேவா என்னை தொலைபேசியில் அழைத்து கதையைக் கூறினார். இது மிகவும் சுவாரஸ்யமான கதை. இதில் சல்மான்கானுடன் நடிக்கிறேன். ஆனால் அவருக்கு ஜோடியாக இல்லை. முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் மிகச்சிறந்த மனிதர். 

image

படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயத்தையும் அவர் நினைவில் வைத்திருக்கிறார். அனைவரிடமும் சகஜமாக பழகுகிறார். அது தான் அவரை சிறந்தவராக உணர வைக்கிறது எனத் தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement