இணையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் - மதுரை ராஜாஜி மருத்துவமனை புதிய ஏற்பாடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 


Advertisement

image 

மதுரை மாவட்டத்தில்  நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் மத்திய ஆய்வு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நாள்தோறும் 1500 முதல் 2000 மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான முடிவுகளை   காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  மருத்துவ கல்லூரி நூலகம் அருகே நேரில் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேரில் வர முடியாதவர்கள் தற்போது மருத்துவ பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

பரிசோதனை முடிவுகளை அதற்கான வலைத்தளமான http://www.mdmc.ac.in/mdmc/ என்ற இணையதளத்தில் பரிசோதனைக்கான மாதிரிகளை கொடுத்தவர், தனது பெயர் வயது மற்றும் தொலைபேசி எண்ணின் கடைசி 5 இலக்க எண்களை பூர்த்தி செய்து முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம், இதனை பதிவிறக்கம் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒருவரது பரிசோதனை முடிவு வெளிவந்த பின் ஏழு நாட்கள் மட்டுமே வலைத்தளத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை சாமானிய மக்கள் பெறுவதில் இருந்த சிக்கலைப் போக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இந்த பயனுள்ள இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement