கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்மாதம் 28-ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அவர்களது உடல்தகுதி குறித்த அறிக்கை அளிப்பதற்காக, 35 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஆரோக்கியத்துடன் இருந்த 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
இதில் ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, சதாப் கான் ஆகிய மூன்று பேருக்கு ஏற்கெனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் நட்சத்திர வீரர் முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், ஃபக்கர் ஸமான் உள்ளிட்ட மேலும் 7 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீரர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
நெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும் 25 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை செய்துவிட்டுத் திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கவனிக்கப்படுவார்கள்.
நெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும் 25 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை செய்துவிட்டுத் திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கவனிக்கப்படுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்