JUST IN

Advertisement

விழுப்புரம்: ஒரே குடும்பத்தில் கொரோனாவிற்கு மூன்று பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்தனர்.


Advertisement

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 1,045 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் மற்றும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே கொரோனாவால் விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் நான்கு பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த பெண்ணின் இரண்டு மகன்களும் ஏற்கெனவே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: கொரோனாவுக்கு கர்ப்பிணி உயிரிழப்பு


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement