“உரிய நடவடிக்கையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தது” - பிரதமர் மோடி

Coronavirus-controlled-in-India-by-right-time-actions---PM-Modi

இந்தியாவில் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், பொருளாதார மீட்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி நேற்று 21 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, பல்வேறு அறிவுரைகளை பிரதமர் வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு, டெல்லி உட்பட 15 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

image


Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட தொற்றில் இருந்து அதிகம்பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக கூறினார். நாட்டில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், நாடு முழுவதும் குறைந்த அளவிலான நோயாளிகளுக்கே வென்டிலேட்டர் அல்லது தீவிர சிகிச்சை வசதி தேவைப்படுவதாக தெரிவித்தார்.

இரண்டு உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா : 2 காவல்நிலையங்கள் மூடல்..!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement