இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

COVID-19: India reports 1st death as cases reach 73

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 354065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2003 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11903 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

Coronavirus: With 88 New Infections, Cases In India Rise To 694 ...

இதுவரை 186935 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 155227 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 113445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 48019 பேருக்கும், டெல்லியில் 44688 பேருக்கும், குஜராத்தில் 24577 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement